விவசாயியை தாக்கியவர் கைது

மாயனூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2025-12-18 08:51 GMT
கிருஷ்ணராயபுரம் அருகே பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (52) விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், அடையாளம் தெரியாத நபரின் மாடு ஒன்று புகுந்து பயிரை மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னுசாமி, கடந்த 15ம் தேதி இரவு 8:00 மணிக்கு பிச்சம்பட்டி பிள்ளையார் கோவில் அருகே, பயிர் நாசமாகிவிட்டதே என, புலம்பியபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி (41) என்பவர் தகாத வார்த்தைகளில் பேசி கீழே கிடந்த கட்டையால் பொன்னுசாமியை தாக்கியுள்ளார்.தடுக்க வந்த பொன்னுசாமியின் மனைவிக்கு, சுப்பிரமணி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த பொன்னுசாமி, கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து பொன்னுசாமி அளித்த புகார்படி, சுப்பிரமணியை கைது செய்த மாயனுார் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Similar News