குடிநீர் பைப் உடைந்து சேரும் சகதியுமாக மாறிய வழித்தடம்; மாணவ மாணவிகள் பாதிப்பு!!
அண்ணாவாசல் அருகே குடிநீர் பைப் உடைந்து அப்பகுதி சேரும் சகதியுமாக மாறியதால் அவ்வழியாக செல்லும் மாணவ மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.;
By : King 24x7 Desk
Update: 2025-12-18 09:27 GMT
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா அன்னவாசல் ஒன்றியம் பூங்குடி ஊராட்சி பூங்குடி கிராமத்தில் குடிதண்ணீர் பைப்பு உடைந்து குடிநீர் வீனாக செலகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு அவதிப்பட்டு செல்கிறார்கள். மேலும் அந்த வழியில் செல்லும் பள்ளி குழந்தைகள் கீழே விழுந்தும் புத்தகங்கள் தண்ணீரில் நனைந்தும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இது சம்மந்தமாக அன்னவாசல் PDO officeல் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.