காப்புக்காடு பகுதியில் பற்றி எரிந்த செடி கொடிகள் பதறிப்போன வனத்துறையினர்

காப்புக்காடு பகுதியில் பற்றி எரிந்த செடி கொடிகள் பதறிப்போன வனத்துறையினர்;

Update: 2025-04-03 06:04 GMT
  • whatsapp icon
திருவள்ளூர்: மர்ம நபர்கள் வைத்த தீயால் சீத்தஞ்சேரி காப்புக்காடு பகுதியில் பற்றி எரிந்த செடி கொடிகள் பதறிப்போன வனத்துறையினர் அறிய மரங்கள் செடிகளை காப்பதற்காக பனை ஓலையை பயன்படுத்தி தீயை போராடி உடனடியாக அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர் திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி பகுதியில் மர்ம நபர்கள் ஏரியில் இருந்த செடிகளுக்கு தீ வைத்ததால் தீ காற்றின் வேகத்தில் பரவி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் தீப்பிழம்புகள் பற்றி எரிந்தது தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் தீயணைப்பு துறை வாகனம் வர தாமதமான நிலையில் பனை ஓலையை பயன்படுத்தி தீயை போராடி உடனடியாக அணைக்கும் பணியில் அவர்கள் சாதுரியமாக ஈடுபட்டனர் சீதாஞ்சேரி பகுதியில் பற்றிய தீயை அணைக்க அருகில் உள்ள ஊத்துக்கோட்டை யில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவள்ளூரில் இருந்து தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ மள மள வென பரவியது. மர்ம நபர்கள் வைத்த தீயினால் அருகில் செங்குன்ற வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடில் தீ பரவாத வண்ணம் வனத்துறையினரின் பெரும் முயற்சியால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Similar News