தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பொதுக்கூட்டம்

தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பொதுக்கூட்டம்;

Update: 2025-04-03 06:12 GMT
  • whatsapp icon
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் உறுதிமொழியை ஏற்றனர். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் பேசுகையில் திமுக இயக்கத்தில் அடிமட்ட தொண்டனாக எவன் உழைத்தாலும் அவன் உயர்த்தப்படுவான் அதுதான் திராவிட மாடல் முதல்வர் தொண்டனுக்கு அளித்த பரிசுதான் அமைச்சர் பதவி என்றும் அனைத்தையும் நிறைவேற்றி மக்களிடம் ஓட்டு போடுங்கள் என கேட்கும் துணிச்சல் திமுகவை தவிர தமிழகத்தில் எந்த கட்சிக்காரனுக்கும் கிடையாது என்றும் அதிமுக ஆட்சி போன பிறகு கட்சி வேட்டியை சலவைகடைக்கு போட்டுவிட்டு தமிழகத்தில் லட்சக்கணக்கான பேர் சாதாரண வேட்டியோடு சுற்றுகின்றனர் என்றும் ஆளும் கட்சியாகா இருக்கும்போது திமுக தொண்டன் வேட்டி கட்டுவதை விட எதிர்கட்சியாக இருக்கும்போது கூடுதலாக கம்பீரமாக வேட்டி கட்டி உலாவருவான் அதுதான் திமுகவின் சொத்து திமுக தொண்டன் உடம்பில் கருப்பு சிவப்பு கலந்த ரத்தம் ஓடும் திமுக ஆட்சிக்கு வந்தபோது கஜானாவில் பணம் இல்லை கருவூலத்தில் பணம் இல்லை அதிமுக ஆட்சியில் சுரண்டிக் கொண்டு போய் விட்டனர் தமிழ் சமுதாயம் பயன்படக்கூடிய வகையில் கச்சத்தீவை மீட்டு தீருவோம் என தீர்மானம் இயற்றி அனைத்து கட்சிகளும் இதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அடிப்படை பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு போராடும் ஒரே போராளி தளபதி முக ஸ்டாலின் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியில் இருந்த போதும் போராட்டம் ஆட்சியில் இல்லாத போதும் போராட்டம் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்காக உழைக்கின்ற கட்சி திமுக என்றும் போட்டி போட்டுக் கொண்டு ஓடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி நான் யாருக்கும் அடிமை வேலை பார்க்க மாட்டேன் எனக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி எதற்கு அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன் எதற்கு டெல்லிக்கு தனியாக சென்றார் நீங்கள் டெல்லிக்கு செல்கின்ற அழகு எங்களுக்கு தெரியாதா பிரதமர் மோடியிடம் நேருக்கு நேராக கேட்பவர் மு க ஸ்டாலின் மாநில உரிமையை பறித்தால் இந்தி திணிப்பு நிதி தர மாட்டாயா நீட் திணிப்பு அகில இந்தியாவில் மோடியை எதிர்க்கின்ற துணிச்சல் உள்ள தலைவன் பெற்றெடுத்த பிள்ளை முதல்வர் முக ஸ்டாலின் அவருக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலினை ஒரு கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட கட்சி அடுத்த வாரிசு தேடுகின்ற கட்சி இல்லை திமுக ஆளும் கட்சி எங்களுக்கு எதிரி நான்கு கட்சிகள் இரண்டாம் இடம் யாருக்கு என்கிற போட்டி தான் அந்த நான்கு கட்சிகளுக்கும் என்று அவர் தெரிவித்தார் பின்னர் சர்ச்சை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் மாற்றுத்திறனாளி திருநங்கை என பெயர் சூட்டி அழகு பார்த்தவர் கலைஞர் டில்லியே எங்கள் மயிரை புடுங்கவில்லை கில்லி எங்கள் மயிறை பிடுங்குமா என்றும் கொரோனா காலத்தில் என்ன செய்தார் விஜய் 75 ஆண்டுகளாக. திமுக கட்சியை நடத்துவது குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவதற்காக என்றும் அமைச்சர் முன்னிலையில் என்னால் பேச முடியாது அண்ணாமலையால் அறிவாலயத்தின் சுவற்றை உருவுவேன் என்றார் சீமான் அண்ணாமலை விஜய் போன்றவர்கள் ஓட்டு கேட்டு வந்தால் முறத்தால் பெண்கள் அடியுங்கள் அப்போது தான் எனது மனது ஆறும் அவர்கள் ஒரு ஆணியும் புடுங்க வில்லை சீமான் கட்சிக்காரன் இடத்தைவிற்று காரை விற்று தற்போது சைக்கிளில் செல்கிறார்கள் சீமான் வெளிநாட்டுக்காரில் செல்கிறார் அது போன்ற நிலைமைக்கு விஜய் ரசிகர்கள் வந்து விடாதீர்கள் நடுரோட்டில் கல்லடி பட்டு சாவீர்கள் துண்டு மப்பளர் போட்டுக் கொண்டு சீன் காட்டுவது இருக்கக் கூடாது பொது குழுவில் பேசு என்றால் நாய் மாதிரி கத்துகிறாய் எங்களை அழிப்பேன் என்று சொல்பவர்களுக்கு எல்லோருக்கும் சமாதிக்கட்டும் கட்சி திமுக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசியல் வாழ்விற்கு முடிவுரை எழுதுவேன் என்கிறார் மயிரை கூட புடுங்க முடியாது இரண்டு கை மற்றும் கால்களுக்கு விலங்கும் வாய்க்கு ஒரு பால் தளபதி போட்டு வைத்துள்ளார் அவிழ்த்து விட்டால் நீங்கள் பேசும் பேச்சுக்கு நாறிப் போய் விடுவீர்கள் என்று தரக்குறைவாக சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் முன்னிலையில் பேசினார்

Similar News