இல்லாத வீட்டுக்கு வரி கேட்டு நகராட்சி நிர்வாகம் தொல்லை : பொதுமக்கள் புகார் மனு

இல்லாத வீட்டுக்கு வரி கேட்டு நகராட்சி நிர்வாகம் தொல்லை அளித்து வருவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு;

Update: 2025-04-03 06:23 GMT
இல்லாத வீட்டுக்கு வரி கேட்டு நகராட்சி நிர்வாகம் தொல்லை : பொதுமக்கள் புகார் மனு
  • whatsapp icon
பூந்தமல்லி அருகே இல்லாத வீட்டுக்கு வரி கேட்டு நகராட்சி நிர்வாகம் தொல்லை அளித்து வருவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வீரராகவபுரம் கிராமம் காடுவெட்டி, பகுதியில் (எஸ்.ஏ.இன்ஜினியரிங்) தனியார் பொறியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகம் அருகே 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வீடுகட்டி வசித்து வரும் நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு வருவாய்த் துறை சார்பில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அந்த இடத்தை அகற்றியுள்ளனர், இந்நிலையில் பகுதி உள்ள மக்களுக்கு மாற்றாக வேறு இடம் தருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கூலித்தொழில் செய்து பிழைத்து வரும் இவர்கள் மாற்று இடம் தருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்ததால் அருகில் வாடகைக்கு குடியேறி வீட்டுமனை தருவார்கள் என்று பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, இதனைதொடர்ந்து பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர், இந்நிலையில் இடித்து அகற்றப்பட்ட இடத்திற்கு வரி செலுத்தக் கோரி திருவேற்காடு நகராட்சி நிர்வாகம்மானது, கட்டாயப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்தனர். இருக்கும் வீட்டையும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்து தனியார் கல்லூரிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், மாற்று இடமும் வழங்காமல் அலைக்கழித்துவிட்டு, தற்போது இல்லாத வீட்டிற்கு வரி கேட்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கேட்டு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். 2021-ல் வீடு இடிக்கப்பட்டு தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் தாங்கள், வாடகை கூட செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், தனியார் கல்லூரிக்கு ஆதரவாக வருவாய்த்துறை, மின்சார வாரியம், காவல் துறை செயல்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அகதிகள் போல் வாழ்ந்து வரும் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனுவை அளித்தனர். ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறாய் என்ற விவேக்கின் காமெடி போல...... இருக்கும் வீட்டை இடித்துதள்ளிவிட்டு வீடே இல்லாத நிலத்திற்கு வரி கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News