நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்;

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மைய பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம செய்தபோது அந்தப் பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு கோரிக்கை வைத்ததால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகாமையில் உள்ள காந்தி சிலை அருகே திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பஉச நகரப் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக் கோரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் செயலாளர் மூவேந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கன்னட ஆர்ப்பாட்டத்தில் நகரின் மையப்பகுதியில் குப்பைக் கிடங்கு உள்ளதால் மக்கள் நோய்வாய் படுகிறார்கள். அங்கு வசிக்கின்ற மக்களுக்கு நீர் மற்றும் குடிநீர் அனைத்தும் மாசுபடுதல் தோல்நோயகள் உள்ளிட்டவைகள் ஏற்படுகின்றன. அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதால் உடலுக்கு கேடு தரும் நச்சுக்காற்று அதிகரித்து கடும் புகை மூட்டம் காரணமாக சாலைகளில் போக்குவரத்து பாதித்து விபத்து ஏற்படுகிறது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் குறித்த கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட அந்த பகுதி மக்கள் நீங்கள் மட்டும் போராடினால் தீர்வு கிடைக்காது அனைத்து கட்சிகளையும் கூட்டி வைத்து போராட்டம் செய்யுங்கள் எங்கள் பகுதி மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் காலம் காலமாக எங்களுடைய பிரச்சனையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகிறோம். ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் மட்டுமல்லாது கூடுதலாக இந்த குப்பை கிடங்கினால் வருகின்ற நோய்க்கு மருந்து சாப்பிட வேண்டிய அவல நிலை இருக்கிறது என்று ஆதங்கப்பட்டனர் இதனால் அந்த கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கடன ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டாலும் மக்கள் தங்கள் பிரச்சனையை கூற முற்படும்போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அரசியல் முன்னெடுப்பு காரணமாக தடுத்து நிறுத்திய சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.