ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
திருச்சியில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.;

திருச்சி விமான நிலையத்தை அடுத்த இந்திராநகா் பகுதியை சோ்ந்தவா் பாலமுருகன் மனைவி தமயந்தி (46). கால்நடை மருத்துவா் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்த இவருக்கு, உடல் நலக்குறைவு காரணமாக தலையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாம். இதனால் அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்ட தமயந்தி, புதன்கிழமை மாலை விரக்தியில் குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகே மொபட்டில் சென்று, அந்த வழியாக காரைக்குடி சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற திருச்சி இருப்புப்பாதை போலீஸாா் அவருடைய உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்