திருச்சி உக்கிர காளியம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா

100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு நேர்த்திக் கடனை பக்தர்கள் செலுத்தினர்.;

Update: 2025-04-03 12:24 GMT
திருச்சி உக்கிர காளியம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா
  • whatsapp icon
திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன், சந்தன கருப்பண்ணசாமி கோவில் பங்குனி தேர் திருவிழா‌ கடந்த 1ம் தேதி இரவு காளி வட்டத்துடன் விழா தொடங்கப்பட்டது. நேற்று சுத்த பூஜை, அம்பாள் வீதி உலா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து இன்று காலை திருத்தேர், குட்டி குடித்தால், பக்தர்களுக்கு. அருள்வாக்கு, கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று நடைபெற்ற குட்டிக்குடி திருவிழாவில் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. நாளை மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை திருக்கோவிலுக்கு அம்மன் சென்றடையும் நிகழ்ச்சியும், தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பாள் சிறப்பு பூஜை, சந்தன காப்பு அலங்காரம் அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. விழாக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன், மருளாளி பிரபாகரன் தலைவர் சொக்கலிங்கம், துணைத் தலைவர் ஜெகதீஸ்வரன், செயல்தலைவர் சண்முகம், செயலாளர் ஜெகதீஸ்வரன் பொருளாளர் நாட்டாமை சண்முகம், துணைத் தலைவர் ராஜா ஆகியோர் மற்றும் தெய்வீக மகாசபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News