
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மருத்துவ மாணவர்களுக்கு மன வலிமை சேர்க்கும் வகையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவ துறை சார்பாக மருத்துவக் கல்லூரியில் பயிலும் இருபாலர் விடுதிகளிலும் மனநல ஆலோசனை மையத்தை கல்லூரி முதல்வர் கலைவாணி திறந்து வைத்தார். மாணவர்களுக்கு மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.