
அன்னவாசல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அன்னவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் புகையிலை பொருட்கள் விற்ற மேட்டுத்தெருவைச் சேர்ந்த குணசேகரன் (42) என்பவரை கைது செய்தனர்.