இராசிபுரம் நகராட்சி பள்ளியில் அடிப்படை திறன் சோதித்தறிதல் நிகழ்வு.
இராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வி. நகர் பள்ளியில் நூறு நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனை சோதித்தறிதல் 16.4.2025 அன்று நடைபெற்றது.;
இராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வி. நகர் பள்ளியில் நூறு நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனை சோதித்தறிதல் 16 .4. 2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் பொன் குமார், இணை இயக்குனர் அவர்களால் பார்வையிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. மாணவ மாணவியர் சிறப்பாக வாசித்தனர். கணிதத்தில் அடிப்படைத் திறன் பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் ச.அருள்மணி சு.கிருஷ்ணமூர்த்தி பள்ளி ஆய்வாளர் முதன்மை கல்வி அலுவலகம் திரு கை. பெரியசாமி பள்ளி துணை ஆய்வாளர் மாவட்ட கல்வி அலுவலகம் தலைமை ஆசிரியை வே .இலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், என் .ஓபுளிராஜ் மற்றும் ஆர்.சிவகுமார் துறை தலைவர் அரசியல் மற்றும் அறிவியல் அரசு கலைக்கல்லூரி இராசிபுரம் மதிப்பீட்டுப் பணியை அய்யா அவர்களும் பார்வையிட்டார்.