2000டன் நெல் மூடைகள் வடசென்னைக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்தில் வழங்குவதற்காக வடசென்னை மாவட்டத்திற்கு ரயில் வேகன்கள் மூலம் அனுப்பி வைப்பு;

Update: 2025-04-16 12:52 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா தாளடி பருவத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து சுமார் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேவைப்படும் மண்டலங்களுக்கு பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வடசென்னை மாவட்டத்திற்கு அரவைக்காக 41 வேகன்களில் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கிடங்குகள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரவை செய்யப்பட்டு அரிசியாக்கி தேவைப்படும் மண்டலங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநயோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News