பாகலூர் அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை
பாகலூர் அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள பாகலூர் அருகே பெருமாள்பள்ளி பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவர் முகுலபள்ளி பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முனிராஜின் உடலுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, தாசில்தார் (பொறுப்பு) பாலாஜி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்