புதுக்கோட்டை-அறந்தாங்கி- மிமீசல் சாலையான இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லத்திராக்கோட்டை பகுதியில்;

Update: 2026-02-11 06:34 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லத்திராக்கோட்டை பகுதியில், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைதுறை சார்பில், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (CRIDP)கீழ்,ரூ.48 கோடியே 13 இலட்சம் மதிப்பீட்டில், மாநில நெடுஞ்சாலையான (SH-26) திருச்சி-புதுக்கோட்டை-அறந்தாங்கி- மிமீசல் சாலையான இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் பணிக்கு அமைச்சர் மெய்ய நாதன் அடிக்கல் நாட்டினார் நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் வடிவேல் தங்கமணி உதவிகோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் உதவி பொறியாளார்ஆஷிதா பானு மற்றும் மனியம்பலம் சுப்பிரமணியன் வாண்டாக்கோட்டை. விஜராஜரெத்தின் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பங்கு பெற்றனர்

Similar News