பொன்னமராவதி அருகே உள்ள குளவாய்பட்டியில் இருந்து காயங்காடு வழியாக புலவனார்குடி செல்லும் தார்ச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிலையில், இப்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலை போல காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மழை நேரத்தில் சாலை சேறும், சக தியுமாக மாறிவிடுவதால் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். சாலையை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
