ஶ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம்
ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவகம் முன்பு பிரதமர் மோடி வருகையை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகம் முன்பு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் இன்று தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி, தைழகதிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிரவெற்றபட்டதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்ட நிதியை வழங்காததை கண்டித்தும், கல்வி நிதி வழங்காததை கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பிய வாரு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.