ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
திளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.;

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நம்பெருமாள் ரெங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்ட ருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் காலை 8 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்ட பத்திற்கு புறப்பட்டார். காலை 8.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 9.40 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பகல் 12.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த தேரின் முன் பக்தர் கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆளும்பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதி களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் ஊழியர் கள் செய்து வருகின்றனர்.