அ.தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினி காந்த் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்;
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினி காந்த் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் மற்றும் குளிர்பானங் களை வழங்கினார். இதில் பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி கலீலுல் ரகுமான், முஸ்தபா, வக்கீல் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிக்குமார், கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்