ஸ்ரீரங்கத்தில் டாக்டர் சின்ன மவுலானா சாலை திறப்பு
டாக்டர் சின்ன மவுலானா சாலை எனப் பெயர் வைக்கப்பட்ட பதாகையை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.;

நாதஸ்வர இசைக் கலைஞர் டாக்டர் ஷேக் சின்ன மவுலானா வாழ்ந்த திருச்சி ஸ்ரீரங்கத்தில் 3-வது வார்டில் உள்ள தங்கைய்யன் தெருவின் பெயரினை "டாக்டர் சின்ன மவுலானா சாலை எனப் பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி ஆணை வழங்கியது. இதை யடுத்து நேற்று அந்த தெருவின் பெயரினை "டாக்டர் சின்ன மவுலானா சாலை எனப் பெயர் வைக்கப்பட்ட பதாகையை அமைச்சர் கே.என் .நேரு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், பழனி யாண்டி எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 58-வது வார்டு ரங்கா நகர் பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதி களை செய்து கொடுக்க அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது, கலெக்டர், மேயர், மத்திய மாவட்ட தி.மு.க. செயலா ளர் வைரமணி, வட்ட செயலாளர் கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட அதி காரிகள் உடன் சென்றனர்.