ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு கடிதம்
துணை போலீஸ் சூப்பிரண்டு, பக்தரை ஆபாசமான வார்த் தைகளால் திட்டிய வீடியோ வைரல் ஆனது;

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் பங்குனி உத் திரத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, ஒரு பக்தர் தனது குடும்பத்தினருடன் வரிசையில் செல்லாமல் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, அந்த பக்தரை வரிசையில் வராமல் எதற்காக குறுக்கே வருகி றீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பக்தர் ஏதோ சொல்ல ஆத் திரமடைந்த துணை போலீஸ் சூப்பிரண்டு, அவரை ஆபாசமான வார்த் தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும், இந்த சம்பவம் பக்தர் கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப் பிரண்டு பழனி, இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.