ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ஜ.,வினர் தூய்மை பணி
உத்திரமேரூர் ஒன்றிய பா.ஜ., சார்பில், களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணி நடந்தது;

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய பா.ஜ., சார்பில், அக்கட்சியின் 45ம் ஆண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணி நடந்தது. விழாக் குழு பொறுப்பாளர் சீனுவாச மூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜவேல், ஒன்றிய தலைவர் விக்னேஷ் முன்னிலை வகித்தனர். அதில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள குப்பையை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.