உலக புத்தக தினம் நீலகிரியில் வாசகர்கள் சங்கமம்............
பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்;
உலக புத்தக தினம் நீலகிரியில் வாசகர்கள் சங்கமம்............ உலகப் புகழ்பெற்ற இலக்கிய மேதைகள் சேக்ஸ்பியர் செர்வாண்டிஸ் போன்றோர் 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மறைந்தனர் இலக்கியத்தில் நீங்க இடம் பெற்றுள்ள இவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினமாக அறிவித்தது. அதன்படி 1995 ஆம் ஆண்டு முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்கள் வாசிப்பது வெறும் பொழுதுபோக்கல்ல வேலைவாய்ப்பை அடைவதற்கான அறிவிப்பு தேடல் மட்டுமல்ல மனிதனுக்குள் தேங்கியுள்ள இயக்கங்களையும் நிராசைகளையும் நீக்கி அமைதியான மனதுடன் வாழ்வதற்கு வழி காட்டுவத நான் புத்தகம் வாசிப்பு என்கின்றனர். நீலகிரி மாவட்டம் அய்யன் நூலகமும் நூலக வாசகர் வட்டமும் இணைந்து உலக புத்தக தினத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் ஒன்றாக அமர்ந்து ஒரு மணி நேரம் அமைதியாக புத்தகம் வாசிக்கும் வாசகர் சங்கமம் நிகழ்ச்சி ஊட்டி ஹச் ஏ டி பி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் செவிலியர் மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு வாசித்தனர்.