துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 25, 26ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார் இதனைத் தொடர்ந்து உதகை ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் ஒத்திகை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், வளர்ந்து வரும் கல்வியில், உயர்கல்விக்கான ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்தும் மாநாட்டில் ஆராயப்படும் என்றும், மேலும், கல்வி நிறுவனங்களின் நிதி மேலாண்மை, தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.