உலக பூமி தினத்தை முன்னிட்டு ஆதீஸ் அமைப்பு சார்பாக உதகை தொகுதிக்கு உட்பட்ட கல்லாக்கோரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பூமியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் பூமியை பாதுகாக்க எத்தகைய வழியை பின்பற்றலாம் என்பதை பற்றி ஆதீஸ் அமைப்பு இயக்குனர் மானேஷ் சந்திரன் மாணவர்கள் இடையே எடுத்துரைத்தார். அதே தருணத்தில் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் முன்னிலையில் பள்ளி உலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது பின்னர் பூமியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் K.B.ஜோகி,Sa.ரபீக்,சிவசங்கரின்,ஷியாம்,மணிகண்டன் உட்பட பலர் ஆதீஸ் அமைப்பு சார்பாக கலந்து கொண்டனர்.