புன்னை:இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து ஆய்வு!
இலவச வீட்டு மனை பட்டா வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு;
புன்னை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் பொருட்டு அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி, வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.