பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மாலை உதகை வந்தடைந்தார்......
மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு;
உதகை ஆளுநர் மாளிகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மாலை உதகை வந்தடைந்தார்...... துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் 25, 26ஆம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், வளர்ந்து வரும் கல்வியில், உயர்கல்விக்கான ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்தும், மாநாட்டில் ஆராயப்படும் என்றும், மேலும், கல்வி நிறுவனங்களின் நிதி மேலாண்மை, தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உதகையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மாலை உதகை வந்தடைந்தார். தொடர்ந்து நாளை குடியரசு துணைத் தலைவர் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.