ஆன்மீகமும் இயற்கையும் ஒன்றிணைந்த ஒரு சிறந்த சுற்றுலா தலம் விபூதி மலை முருகன் கோவில்
சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் சாமி தரிசனம்;
ஆன்மீகமும் இயற்கையும் ஒன்றிணைந்த ஒரு சிறந்த சுற்றுலா தலம் விபூதி மலை முருகன் கோவில் நீலகிரி மாவட்டம் ஊட்டி காட்டுப்பகுதிக்குள் மலைமேல் அமைந்துள்ள ஒரு முருகன் கோவிலுக்கு த்ரில்லிங்கான ஒரு அட்வெஞ்சர் பயணம் செய்துதான் செல்ல முடியும். இது ஆஃப் ரோடாக இருப்பதால் இங்கு தனியார் வாகனங்களில் செல்ல முடியாது. இங்கு வாடகை ஜீப்களில் தான் செல்ல முடியும் மசினகுடி அருகிலுள்ள பொக்காபுரத்தில் அமைந்துள்ள விபூதி மலை முருகன் கோவில், நீலகிரி மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மலை உச்சி கோவிலாகும். விபூதி மலை முருகன் கோவில், மசினகுடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல, சுமார் 3 கிலோமீட்டர் வரை ஜீப்பில் பயணிக்கவேண்டும் அல்லது , பின்னர் சுமார் 30 நிமிடங்கள் நடைபயணம் செய்ய வேண்டும் இத்திருக்கோவில் கோவில் 1996 ஆம் ஆண்டு நடிகர் மிதுன் சக்ரவர்த்தி அவர்களால் புதுப்பிக்க பட்டது மலை உச்சியில் அமைந்துள்ளதால், சுற்றியுள்ள பந்திப்பூர், முதுமலை மற்றும் வயனாடு பகுதிகளின் அழகான காட்சிகளை அற்புதமாக வழங்குகிறது . இத்திருக்கோவிலில்கோவிலில் தைப்பூசம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன . கோவில், நீலகிரி உயிரியல் பூங்காவின் அருகில் உள்ளதால், சுற்றியுள்ள பகுதிகளில் மலைகள், காடுகள் மற்றும் வனவிலங்குகளை காணலாம். இது, இயற்கை மற்றும் ஆன்மீக அமைதியை விரும்பும் பயணிகளுக்கு சிறந்த இடமாகும் விபூதி மலை முருகன் கோவில், ஆன்மீகமும் இயற்கையும் ஒன்றிணைந்த ஒரு சிறந்த பயண இடமாகும். இங்கு சென்று, முருகப்பெருமானின் அருளைப் பெறும் அனுபவத்தை நீங்கள் பெறலாம் என்பதால் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்