காய்கறி கடைகளை ஒருங்கிணைக்க கோரிக்கை.
மதுரை மேலூரில் காய்கறி கடைகளை ஒருங்கிணைக்க கோரிக்கையை வியாபாரிகள் எழுப்பியுள்ளனர்.;
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் நகராட்சி அலுவலகம் பின் புறத்தில் கடந்த ஆண்டு ரூ. 7.87 கோடியில் புதிதாக தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டது. தரைத்தளம், மேல் தளம் என இரண்டு இடங்களிலும் சேர்த்து நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு வசதிகளுடன் உள்ள இந்த கட்டிடத்தில் காய்கறி கடைகள் துவக்கப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட தினசரி மார்க்கெட்டில் வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் புலம்புகின்றனர். மேலூரில் அரசு மருத்துவமனை அருகே, அழகர்கோவில் சாலை, சந்தைபேட்டை, செக்கடி என பல இடங்களில் சாலை ஓர காய்கறி கடைகள் வைக்க, மார்க்கெட் பொதுமக்கள் வருகை குறைய ஆரம்பித்தது. இதனால் மார்க்கெட்டில் காய்கறி கடையை வைத்துள்ள வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். பல கோடி செலவில் கட்டப்பட்ட காய்கறி வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அனுமதி என்று சாலை ஓரங்களில் செயல்படும் கடைகளை நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.