குளித்தலை கோட்டத்தில் மது விற்ற 7 பேர் கைது
குளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை, நங்கவரம், மாயனூர் போலீசார் அதிரடி;
கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை, நங்கவரம், மாயனூர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற கண்ணன் 61, பிரகாஷ் 27, பழனிச்சாமி 46 , பழனிச்சாமி 46, முத்துசாமி 69, குமரவேல் 49, சக்திவேல் 60 ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 169 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.