புளியங்குடி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக எம்.ஜி. மோகன்ராஜ் நியமனம்
புளியங்குடி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக எம்.ஜி. மோகன்ராஜ் நியமனம்;
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்ட எம்.ஜி. மோகன்ராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கென்னடி, மத்திய மாவட்ட தலைவர் அய்யாதுரை, மேற்கு மாவட்ட தலைவர் என்டிஎஸ் சார்லஸ், கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது அயூப், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அம்ஜத் கான், வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் வழக்கறிஞர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் நகர தலைவர் மாரியப்பன், சிவகிரி நகரத் தலைவர் ராமராஜ், ராயகிரி நகரத் தலைவர் முருகன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.