தோகைமலையில் திமுக சார்பில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி பிரச்சார கூட்டம்

திமுக முன்னாள் எம்எல்ஏ ராமர், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராகவன் தலைமை வகித்தனர்;

Update: 2025-12-27 15:14 GMT
கரூர் மாவட்டம் தோகைமலை மேற்கு ஒன்றிய திமுக சார்பாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பின் கீழ் திண்ணைப் பிரச்சாரம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னால் எம்எல்ஏ மற்றும் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர் மேற்பார்வையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தோகைமலை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ராகவன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி வளைதள பொறுப்பாளர் தீபா சக்திவேல், ஒன்றிய அவைத்தலைவர் தங்கராசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிரவன், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் விநாயகம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் அண்ணலெட்சுமி செல்வமணி, இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தோகைமலை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ராகவன் பேசும்போது: தலைமை கழகத்தின் ஆலேசனைப்படி, கரூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழிகாட்டுதல்படி, தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னால் எம்எல்ஏ ராமர் மேற்பார்வையில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிக்கான பணிகள் பில்லூர் ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. நமது வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று களப்பணிகளை சிறப்பாக செய்ய தலைமைக் கழகம் ஆலோசனை வழங்கி உள்ளது. இதற்காக நமது அரசு செய்து வரும் திட்டங்களை நமது கழக நிர்வாகிகள் பொதுமக்களிடம் கூறவேண்டும். இதில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம், இல்லம் தேடி கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், முதலமைச்சரின் தாயமானவர் திட்டம், கலைஞர் கனவு இல்லம், புதுமைப்பெண் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், தமிழ் புதல்வன் திட்டம் உள்பட எண்ணற்ற திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வருவதை மக்களிடம் நாம் எடுத்துக்கூற வேண்டும். இதன் மூலம் பில்லூர் வாக்குச்சாவடி மையத்தில் திமுகவிற்கு அதிகமான வாக்குகள் பதிவு செய்து நமது கழகம் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெற செய்து, மீண்டும் நமது ஆட்சி அமைய அனைவரும் அணி திரளவேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மகளிரணி துணை அமைப்பாளர் மகேஸ்வரி, நிர்வாகிகள் சுப்பிரமணி, பிச்சை, லெட்சுமமோகன், முத்துராமன், பெருமாள், மனோகரன், முருகேசன், ரவி, பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News