ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டுப்பாக்கம் அரசு கல்லூரியில், ரூ. 7.15 கோடி மதிப்பீட்டில், 25 கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார். அதைதொடர்ந்து, அமைச்சர் காந்தி குத்துவிளைக்கு ஏற்றி, இனிப்பு வழங்கினார். நெமிலி ஒன்றிய குழு தலைவர், வடிவேலு கல்லூரி முதல்வர் யூசுப் கான், மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பெருமாள் கலந்து கொண்டனர்.