தேனி எஸ்.பி அலுவலகத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக, சேவையாற்றும் 23 அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினரை ஊக்கப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (மே.20) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஊர்க்காவல் படை திண்டுக்கல் சரக உதவி தளபதி அஜய்கார்த்திக்ராஜா தலைமை வகித்தார். தேனி எஸ்.பி சிவபிரசாத் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.