உப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காமல் இருந்துள்ளது. இதனால் வேதனையில் இருந்து வந்த செல்வம் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் நேற்று (மே.20) வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.