சோளிங்கர்: கல்குவாரியில் ஊராட்சி செயலர் சடலம் மீட்பு!
கல்குவாரியில் ஊராட்சி செயலர் சடலம் மீட்பு!;
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் கிராமத்தை சேர்ந்த 53 வயதான வெங்கடேசன், கரிக்கல் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வந்தவர், இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், இன்று கரிக்கல் கல்குவாரி குட்டையில், சடலமாக மீட்கப்பட்டார். கொண்ட பாளையம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.