சேலம் முருங்கப்பட்டி கோவில் விழாவில் எருதாட்டம்

நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு;

Update: 2025-05-25 04:31 GMT
சேலம் முருங்கப்பட்டி முத்துமாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. கடந்த 20-ந் தேதி தொடங்கிய விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலையில் எருது விடும் விழா நடந்தது. இதில் ஏராளமானவர்கள் தங்களது எருதுகளை அலங்கரித்து கோவில் வளாகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எருதுகள் எருதாட்டத்தில் விடப்பட்டன. பக்தர்கள் எருதுகளை அழைத்துக் கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா எம்.ஏ.பி.பிரசன்ன பூபதி செய்திருந்தார்.

Similar News