சேலம் கோரிமேட்டை சேர்ந்தவர் சபீர் (வயது 49). இவர் வீராணம் பகுதியில் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சபீரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.