சேலம் அருகே ஒரு தலை காதலால் விரக்தி: அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாலிபர் திடீர் சாவு

போலீசார் விசாரணை;

Update: 2025-05-26 08:39 GMT
சேலம் அருகே தளவாய்ப்பட்டி பெத்தானூர் கலர்காடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 19). வெள்ளி பட்டறை தொழிலாளி. இந்நிலையில், சந்தோஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சந்தோஷ்குமார் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று வீட்டின் அருகே அவர் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சந்தோஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தினர். ஒருதலை காதலால் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார் அளவுக்கு அதிமாக மது அருந்தியதால் அவர் இறந்தாரா? அல்லது விஷம் ஏதும் குடித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலை காதலால் விரக்தி அடைந்த வாலிபர் அளவுக்கு அதிமாக மது அருந்தியதால் இறந்துபோன சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News