விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் சுகாதார பிரிவு சர்வதேச கருத்தரங்கு

பேராசிரியர்கள் பங்கேற்பு;

Update: 2025-05-26 08:42 GMT
விநாயகா மிஷனின் விம்ஸ் வளாகத்தில் செயல்படும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பொது சுகாதார பிரிவின் மூலம் சர்வதேச அளவிலான கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் பேராசிரியை தமிழ் சுடர் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார். இதனை தொடர்ந்து மாலத்தீவை சேர்ந்த எல்லா கல்லூரியின் துணை இயக்குனர் டாக்டர் சுல்தான் கலீபா, இங்கிலாந்தை சேர்ந்த தொற்று நோய் கண்காணிப்பு மையத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ரூபேஷ்குமார், சென்னையின் பாலியல் மற்றும் சுகாதார ஆராய்ச்சி கொள்கை மையத்தின் தலைவர் வெங்கடேசன் சக்கரபாணி, சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மற்றும் பொது சுகாதாரத்துறை இணை பேராசிரியர் டாக்டர் கல்பனா, சென்னை இ.எஸ்.ஐ.சி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சமூக மருத்துவத்துறை இணை பேராசிரியர் டாக்டர் சுதந்திரக்கண்ணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பொது சுகாரத்துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தல், படவிளக்க காட்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. முடிவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரியின் பொது சுகாதார பிரிவின் உதவி பேராசிரியை பிரியங்கா நன்றி கூறினார்.

Similar News