சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்

ஆணையாளர் இளங்கோவன் தகவல்;

Update: 2025-05-27 03:54 GMT
சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சி.எஸ்.ஐ. சர்ச் மற்றும் உழவர் சந்தை ஆகிய 2 இடங்களில் குடிநீர் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News