சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
மத்திய அரசு வங்கியில் நகை கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் நகரத்திலுள்ள ஸ்டேட் வங்கி எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஜி. ரமேஷ் பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, குமராட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகா, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமரன், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய், புவனகிரி ஒன்றியச் செயலாளர் காளி. கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய விதிகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து விளக்கி பேசப்பட்டது.