கடலூர்: இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிப்பு
கடலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்டத் தலைவர் ஆர். எஸ். தேவா தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வருகின்ற ஜூன் மாதம் 2 தேதி அரசு பள்ளி துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி திறக்க உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி குடிநீர் மற்றும் மதிய உணவு, கழிப்பிட வசதி செய்து தரக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் பள்ளிகள் திறக்கும் முன் பள்ளிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.