பண்ருட்டி: வாராந்திர கவாத்தினை பார்வையிட்ட எஸ்பி

பண்ருட்டியில் வாராந்திர கவாத்தினை எஸ்பி பார்வையிட்டார்.;

Update: 2025-06-01 15:13 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பண்ருட்டி உட்கோட்ட காவலர்களின் வாராந்திர கவாத்தினை (Parade) பார்வையிட்டார். பின்னர் காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து பணிகளை சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பண்ருட்டி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா உடன் இருந்தார்.

Similar News