கடலூர்: புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கடலூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
உலக புகையிலை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ஆகியோர் துவக்கி வைத்தனர். புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.