வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர் ஆய்வு!
மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் திறந்து ஆய்வு செய்தார்;
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்) சுப்புலெட்சுமி இன்று (04.06.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் திறந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.