சி.என். பாளையம் பள்ளியில் விழிப்புணர்வு

சி.என். பாளையம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-06-09 16:06 GMT
கடலூர் மாவட்டம் C.N. பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மாணவ மாணவியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்வி மற்றும் விளையாட்டில் முக்கியத்துவம் அளித்து வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் புகையிலை, மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை வாழ்க்கையிலேயே உபயோகப்படுத்த மாட்டேன், புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன், சாதிய பாகுபாடு பார்க்க மாட்டேன், நான் என் பெற்றோருக்கும், படித்த பள்ளிக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும், சமூகத்துக்கும் சிறந்தவனாக இருப்பேன் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாணவ மாணவிகள் மாணவிகள் பங்கேற்றனர். .

Similar News