எனது கருத்தியல் உடன்பிறப்பு - ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2025-06-19 10:14 GMT
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், எனது கருத்தியல் உடன்பிறப்பான ராகுல் காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உதிரத்தால் அல்ல, சிந்தனை, தொலைநோக்குப் பார்வையால் பிணைக்கப்பட்டவர்கள் நாம். நீங்கள் தொடர்ந்து உறுதியாக நின்று துணிவுடன் வழிநடத்த வேண்டும். ஒளிமயமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News