தங்க விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!

தூத்துக்குடி விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்க 48வது ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம்; நாளுக்கு நாள் விலை ஏறும் தங்க விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம்;

Update: 2025-06-19 12:13 GMT
தூத்துக்குடி விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்க 48வது ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம்; நாளுக்கு நாள் விலை ஏறும் தங்க விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் தூத்துக்குடி விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்கம் 48வது ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம் தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைவர் முனியசாமி ஆசாரி தலைமை தாங்கினார். அனைவரையும் கே எஸ் பி ஏ மகாராஜன் ஆசாரி வரவேற்று பேசினார். சங்க வரவு செலவு கணக்குகளை பொருளாளர் செல்வகுமார் ஆசாரி தாக்கல் செய்தார். தொடர்ந்து விஸ்வகர்மா மாணவ மாணவிகள் மேற்படிப்பு படிப்பதற்காக கல்வி உதவித் தொகையை ஆலோசகர் பலவேச கார்த்திகேயன் வழங்கினார். இதில் சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தினமும் தங்க நகைகள் விலை ஏற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். நகை தொழிலாளர்களை பாதுகாக்க அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்ந்து அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோயை ரத்த அழுத்த பரிசோதனை நடைபெற்று அவர்களுக்கு கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ஸ்ரீதர் வெங்கடேஷ், செயலாளர் மகாராஜன், முருகன ஆசாரி, உள்ளிட்டர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News