அரியலூர், ஜூன் 20- அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், தேசிய வாசிப்பு தினம் வியாழக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் இரா.வேல்முருகன் தலைமை வகித்து, இன்றைய தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை மறந்து கைப்பேசி மற்றும் ஊடங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அவர்களின் அறிவும் மனநிலையும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்கள் நல்ல நூல்களை வாசித்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் தாங்கள் அடைய விரும்பும் லட்சியங்களை எளிதில் அடையலாம் என்றார். நிகழ்ச்சியில், முதுகலை தமிழாசிரியர் இராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக நூலகர் முருகானந்தம் வரவேற்றார்.முடிவில், நூலகர் ந.செசிராபூ நன்றி கூறினார்.