அரியலூர் மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்

அரியலூர் மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-20 15:55 GMT
அரியலூர், ஜூன் 20- அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்ட கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றறது. கூட்டத்துக்கு, மாவட்ட நூலக அலுவலர் இரா.வேல்முருகன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளிடம் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். நூலகத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றறார். கூட்டத்தில், மாவட்ட மைய நூலகத்தில் பயின்று, தற்போது கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றி வரும் ஜெயப்பிரகாஷ் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.9,000 மதிப்பிலும், தமிழரசன் ரூ.3000 மதிப்பிலும், ராஜேஷ்கண்ணன் ரூ.3,000 மதிப்பிலும் மின்விசிறி மற்றும் தளவாடப் பொருள்களை நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினர். கூட்டத்தில், நூலகத்துக்கு அதிகப்படியான நன்கொடைகளை பெறுவது, அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைறவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நூலகர்கள் இரா. முருகானந்தம், ந. செசிராபூ ஆகியோர் செய்திருந்தனர்

Similar News